ADDED : பிப் 12, 2025 11:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு அருகே, மதுபானம் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் மலைச்சாமி, 49, கூலி தொழிலாளி. இவர் கிணத்துக்கடவு, முள்ளுப்பாடி ரயில்வே கேட் அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்தார். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார், அவரை கைது செய்து, 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
* நெகமம், கப்பளாங்கரையை சேர்ந்தவர் சுப்ரமணியன், 34, கூலி தொழிலாளி. இவர் வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, சுப்ரமணியம் வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அவரது வீட்டில் இருந்து, 24 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.