ADDED : மே 15, 2025 11:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு, ;கிணத்துக்கடவுக்கு உட்பட்ட பகுதிகளில், லாட்டரி விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, பழைய பஸ் ஸ்டாப் பகுதியில் நின்றிருந்த மணிகண்டபுரத்தைச் சேர்ந்த கருப்புசாமி, 70, என்பவரிடமிருந்து அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி 10 மற்றும் 200 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோன்று, புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நல்லட்டிபாளையத்தை சேர்ந்த பிரபு, 43, என்பவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் 10, மூன்று மற்றும் நான்கு இலக்க எண்கள் கொண்ட பேப்பர்கள் மற்றும் மொபைல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் இருவர் மீதும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததற்காக வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டனர்.