/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆன்லைன் லாட்டரி விற்ற இருவர் கைது
/
ஆன்லைன் லாட்டரி விற்ற இருவர் கைது
ADDED : செப் 15, 2025 11:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனுார்; கோவை, கரும்புக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம், நேற்று முன்தினம் ஆசாத் நகரில் ரோந்து சென்றார். மலபார் கோல்டு பேக்கரி அருகே சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த ஒருவரை விசாரித்தார். அதே பகுதியில் உள்ள ஐந்தாவது வீதியை சேர்ந்த அனீஷ், 50 என்பதும், மொபைல்போன் மூலம் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதும் தெரிந்தது.
இதேபோல், கிங்ஸ் பேக்கரி அருகே ஆன்லைன் லாட்டரி விற்பனையில், எம்.சி.ஆர்.நகரை சேர்ந்த நாகூர்மைதீன், 60 ஈடுபட்டது தெரிந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.