/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதை மாத்திரை கடத்திய இருவர் கைது
/
போதை மாத்திரை கடத்திய இருவர் கைது
ADDED : ஜூலை 21, 2025 11:39 PM

பாலக்காடு; பாலக்காடு அருகே, போதை மாத்திரை உடன் இருவரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொழிஞ்சாம்பாறை நடுப்புணியில் இன்ஸ்பெக்டர் அருண்குமாரின் தலைமையிலான போலீசார், வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, பொள்ளாச்சி பகுதியில் இருந்து பாலக்காடு நோக்கி வந்த (கேஎல் 53-யு 0250) காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, காரில், 338.16 கிராம் கொண்ட எம்.டி.எம்.ஏ., போதை மாத்திரை மறைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து நடத்திய விசாரணையில், காரில் இருந்த மலப்புரம் மாவட்டம் மேலாற்றூர் பகுதியைச் சேர்ந்த முகமது நாஷிப், 39, பாலக்காடு மாவட்டம் அலநல்லூர் பகுதியைச் சேர்ந்த பாசில், 32, என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.