/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது
/
கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது
ADDED : நவ 12, 2024 05:32 AM
பொள்ளாச்சி ; பொள்ளாச்சி அருகே, கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திய இருவரை, போலீசார் கைது செய்தனர்.
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலானய்வுத்துறை டி.ஐ.ஜி., சீமா அகர்வால், எஸ்.பி., பாலாஜி சரவணன் ஆகியோர் அறிவுரைப்படி, டி.எஸ்.பி., மரியமுத்து மேற்பார்வையில் பொள்ளாச்சி குடிமைப்பொருள் போலீசார், ரேஷன் அரிசி கடத்தலைத்தடுக்க ரோந்து பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், ஆனைமலை - கோட்டூர் ரோடு, அண்ணா நகர் பள்ளி வாசல் அருகே, அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமாக, வாகனத்தணிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.
அப்போது, ஆனைமலை தாலுகா அங்கலக்குறிச்சியைச்சேர்ந்த கவின்குமார், கோட்டூர் மலையாண்டிபட்டணத்தைச்சேர்ந்த பிரியாசன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து, இருசக்கர வாகனத்தில் முறைகேடான முறையில், சேகரித்த, 2,350 கிலோ ரேஷன் அரிசியை, சரக்கு வாகனத்தில் ஏற்றி கேரளாவுக்கு கடத்த முயன்றவர்களை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கேரளா மாநிலம் செமணாம்பதியைச்சேர்ந்த பாட்ஷாவிடம் விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. மேலும், கவின்குமார், போலீஸ் நடமாட்டத்தை கண்காணிக்க, ஆம்னி வேனில் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து, ரேஷன் அரிசி மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள பாட்ஷாவை போலீசார் தேடி வருகின்றனர்.