/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மோட்டார், பேட்டரி திருடிய இருவர் கைது
/
மோட்டார், பேட்டரி திருடிய இருவர் கைது
ADDED : அக் 14, 2025 09:53 PM
தொண்டாமுத்தூர்; காரமரத்தூரில், தோட்டத்திலிருந்த மோட்டார் மற்றும் பேட்டரி திருடிய சிறுவன் உட்பட, இருவரை போலீசார் கைது செய்தனர்.
இக்கரை போளுவாம்பட்டி அடுத்த காரமரத்தூரை சேர்ந்தவர் வேலுச்சாமி, 70. இவருக்கு சொந்தமான தோட்டம், அதே பகுதியில் உள்ளது. இரு தினங்களுக்கு முன் இரவு, இந்த தோட்டத்தில் இருந்த மோட்டார் மற்றும் பேட்டரியை, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
வேலுச்சாமி, ஆலாந்துறை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி, மோட்டாரை திருடிய ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் சிங், 25 மற்றும் 14 வயது சிறுவன் ஆகிய இருவரை பிடித்தனர்.
ஆகாஷ் சிங்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். 14 வயது சிறுவனை, கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.