/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொலை வழக்கில் கைதான இருவர் காலில் எலும்புமுறிவு
/
கொலை வழக்கில் கைதான இருவர் காலில் எலும்புமுறிவு
ADDED : ஜன 10, 2026 05:10 AM
கோவை: கொலை வழக்கில் கைதான இருவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் கட்டு போடப்பட்டுள்ளது.
செல்வபுரம், கெம்பட்டி காலனியை சேர்ந்த பிரவீன்குமார்,24, கடந்த 7ம் தேதி கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
போலீசார் விசாரிக்கையில், 2024ல், கோகுலகிருஷ்ணன் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில், பிரவீன்குமார் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தார். இதனால், கோகுல கிருஷ்ணன் கொலைக்கு பழிக்கு பழிவாங்க, பிரவீன்குமார் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இது தொடர்பாக, கெம்பட்டி காலனியை சேர்ந்த மனோஜ்,25, பிள்ளையார் புரத்தை சேர்ந்த கமலகண்ணன்,25, கைது செய்யப்பட்டனர். இவர்களை பிடிக்க சென்ற போது தப்பி ஓட முயன்றதால், இருவரது வலதுகாலில் எலும்பு முறிவு ஏற்பட்டு கட்டு போடப்பட்டுள்ளதாக, செல்வபுரம் போலீசார் தெரிவித்தனர்.

