/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரு பைக்குகள் மோதல்: ஒருவர் பலி
/
இரு பைக்குகள் மோதல்: ஒருவர் பலி
ADDED : நவ 11, 2025 10:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: சரவணம்பட்டியை சேர்ந்தவர் சந்திரசேகர், 53; தனியார் நிறுவன ஊழியர். தற்போது பீளமேட்டில் தங்கியுள்ளார். தனது பைக்கில், சரவணம்பட்டி அம்மன் நகர் சப்-வே அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் அதிவேகமாக வந்த மொபட் அவர் மீது மோதியது. இதில், சந்திரசேகர் துாக்கி வீசப்பட்டு, அங்கிருந்த பேரிகார்டில் மோதினர்.
இதில் அவரது நெஞ்சுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

