/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் துறை சந்திக்கும் இரு சவால்கள் அக்ரிடெக் கருத்தரங்கில் கவலை
/
வேளாண் துறை சந்திக்கும் இரு சவால்கள் அக்ரிடெக் கருத்தரங்கில் கவலை
வேளாண் துறை சந்திக்கும் இரு சவால்கள் அக்ரிடெக் கருத்தரங்கில் கவலை
வேளாண் துறை சந்திக்கும் இரு சவால்கள் அக்ரிடெக் கருத்தரங்கில் கவலை
ADDED : மார் 10, 2026 05:33 AM

கோவை: வேளாண் பல்கலையில், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், 'அக்ரிடெக்' கருத்தரங்கு நடந்தது.
கருத்தரங்கு துவக்க விழாவில், வேளாண் இயந்திரங்கள் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் ராஜ்குமார் பேசியதாவது:
இந்திய வேளாண் துறையில் இயந்திரமயமாக்கல் என்பது, டிராக்டர் மயமாதல் என்பதாகவே இருந்தது.
தற்போதுதான் உண்மையான இயந்திரமயமாக்கல் துவங்கியிருக்கிறது. விதைப்பான், நடவு, அறுவடை என, அனைத்துப் பிரிவுகளிலும் இயந்திர பயன்பாட்டை நோக்கி நகர்கிறோம்.
இந்தியாவில் 80 சதவீத விவசாயிகள் 2 ஹெக்டருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ளனர். விவசாய நில உடமை, வாரிசுகளுக்கு பாகப்பிரிவினை நடக்கும்போது, நிலப்பரப்பு மேலும் துண்டாகிறது. இது ஒரு சவால்.
இந்த சவாலை எதிர்கொள்ளும் விதத்தில், வேளாண் பொறியியல் துறையின் திட்டமிடல் இருக்க வேண்டும். பருவநிலை மாற்றம் மற்றொரு சவால்.
பருவம் தவறுவதால் ஏற்படும் இயற்கைச் சூழல் மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் இயந்திரங்கள் வடிவமைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
வேளாண் பொறியியல் கல்லூரி டீன் ராஜ்குமார், டீன்கள் வெங்கடேச பழனிசாமி, வெங்கடேசன், பாபு, ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இயந்திரமயமாதல் என்பது அறுவடையோடு நின்று விட்டது. சமீபகாலமாகத்தான் அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பத்திலும் இயந்திரமயமாக்கல் நடக்கத் தொடங்கியிருக்கிறது. இயந்திர பரிசோதனை ஆய்வகங்களிலும் இதே நிலை இருக்கிறது. இயந்திரமயமாதல் என்பது முழுமையானதாக இருக்க வேண்டும் - அழகு சுந்தரம் சி.இ.ஓ., டிஎன்.அபெக்ஸ்

