ADDED : செப் 16, 2026 07:25 PM
அ நிறம் | அளவு
அன்னுார்: அன்னுார் அருகே சிறுத்தை தாக்கியதில், இரு மாடுகள் படுகாயமடைந்தன.
அன்னுார் அருகே ஆத்திகுட்டை பகுதியில் விவசாயி ராயப்பன், ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த இரு மாடுகளை, சிறுத்தை தாக்கியதை கண்ட இவர் சப்தமிட்டதால், சிறுத்தை தப்பியது. சிறுமுகை வனத்துறையினர் கால் தடங்களையும், காயம்பட்ட மாடுகளையும் ஆய்வு செய்தனர்.
ராயப்பன் கூறுகையில், ‘‘ஒவ்வொரு தோட்டத்திலும் தனித்தனியாக குடும்பங்கள் வசித்து வருகிறோம். மீண்டும் சிறுத்தை தோட்டத்துக்கு வந்தால், அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது. வனத்துறையினர் இங்கு கூண்டு வைக்க வேண்டும். படுகாயம் அடைந்த மாடுகளுக்கு, நிவாரணம் வழங்க வேண்டும்,’’ என்றார்.
