/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒரு கி.மீ., தொலைவில் இரண்டு உழவர் சந்தைகள்; மாற்று பயன்பாட்டுக்கு அனுமதிக்க ஆலோசனை
/
ஒரு கி.மீ., தொலைவில் இரண்டு உழவர் சந்தைகள்; மாற்று பயன்பாட்டுக்கு அனுமதிக்க ஆலோசனை
ஒரு கி.மீ., தொலைவில் இரண்டு உழவர் சந்தைகள்; மாற்று பயன்பாட்டுக்கு அனுமதிக்க ஆலோசனை
ஒரு கி.மீ., தொலைவில் இரண்டு உழவர் சந்தைகள்; மாற்று பயன்பாட்டுக்கு அனுமதிக்க ஆலோசனை
ADDED : நவ 18, 2024 09:41 PM
கோவை; கோவை குறிச்சி, சுந்தராபுரம் பகுதிகளில் ஒரு கி.மீ., தொலைவில் இரண்டு உழவர் சந்தைகள் இருப்பதால், காய்கறி விற்பனை குறைவதால், குறிச்சி சந்தையை ஆக்கப்பூர்வமாக வேறு பயன்பாட்டிற்கு மாற்ற பல்வேறு தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.
கோவையில், ஆர்.எஸ்.,புரம், சிங்காநல்லுார், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், குறிச்சி,சுந்தராபுரம், சூலுார், வடவள்ளி ஆகிய எட்டு இடங்களில் உழவர் சந்தைகள் செயல்படுகின்றன. எட்டு சந்தைகளிலும் சேர்த்து, 634 கடைகள் உள்ளன. நாள் ஒன்றுக்கு, 180 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில், சுந்தராபுரம் மற்றும் குறிச்சி உழவர்சந்தைகள் ஒரு கி.மீ., தொலைவில் இருப்பதாலும், அருகருகே பல கடைகள் இருப்பதாலும் அங்கு விற்பனை மந்தமாக உள்ளன. விற்பனை குறைவால், விவசாயிகளும் அங்கு வர தயக்கம் காண்பிக்கின்றனர். குறிச்சி சந்தையில், 60 கடைகளும், சுந்தராபுரம் சந்தையில் 32 கடைகளும் உள்ளன. சுந்தராபுரம் கடையில், 12டன் நாள் ஒன்றுக்கு விற்பனையாகிறது. குறிச்சியில், 1 டன் என்ற அளவில் மட்டுமே விற்பனை உள்ளது.
இதுகுறித்து, வேளாண் விற்பனை மற்றும் வணிக துணை இயக்குனர் மீனாம்பிக்கை கூறுகையில், '' குறிச்சி சந்தை முதலில் துவக்கப்பட்டது; அங்கு விற்பனை குறைவு என்பதால் அதன் பின்னர் சுந்தராபுரத்தில் துவக்கப்பட்டது. ஒரு கி.மீ., தொலைவில் இரண்டு சந்தைகள் உள்ளதால், குறிச்சி உழவர் சந்தையை மாலை நேர சந்தையாக மாற்றியுள்ளோம். இருப்பினும் விற்பனை குறைவு என்பதால், மாற்று பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தலாமா என கேட்டு அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்,'' என்றார்.

