ADDED : அக் 24, 2024 09:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, இம்மிடிபாளையத்தை சேர்ந்தவர் பழனி, 50, தனியார் கம்பெனி பணியாளர். இவரது மனைவி சரசு, 47. இருவரும் பைக்கில், பொள்ளாச்சி - கோவை ரோட்டில் தனியார் பள்ளி அருகே சென்ற போது, கோவையை சேர்ந்த சிவகணேஷ், 33, என்பவர் ஓட்டி வந்த கார், பைக் மீது மோதியது.
விபத்தில் காயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.