/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செயின் பறிப்பு வழக்கில் இருவருக்கு சிறை
/
செயின் பறிப்பு வழக்கில் இருவருக்கு சிறை
ADDED : நவ 13, 2025 09:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்: சூலுார் அடுத்த கண்ணம்பாளையத்தில் நடந்து சென்ற பிரியா என்ற பெண்ணிடம், பைக்கில் வந்த இருவர் செயினை பறித்து தப்பினர். இச்சம்பவம் குறித்து சூலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். நேற்று காங்கயம் பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் சென்ற இருவரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் மடத்துக்குளத்தை சேர்ந்த ராகவன், 24, சூர்யா, 31 என்பதும், இருவரும் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

