சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இரண்டு மாத உதவித்தொகை ‘ஓகே’
சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இரண்டு மாத உதவித்தொகை ‘ஓகே’
UPDATED : அக் 14, 2026 08:20 PM
ADDED : அக் 14, 2026 08:18 PM
கோவை: சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் மற்றும் உதவித்தொகை பெறுபவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாகத் தொகை வரவு வைக்கப்படவில்லை எனப் புகார்கள் வருகின்றன.
இது குறித்து கேட்டபோது மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியம் மற்றும் உதவித்தொகைகளை வங்கிக் கணக்குகளில் செலுத்துவதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாக, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் மேலும் கூறுகையில், ‘ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வைத்திருப்பவர்களின் கணக்குகளை முறைப்படுத்தி வருகிறோம். இதன் ஒரு பகுதியாக, உதவித்தொகை பெறும் வங்கி கணக்குடன் ஆதார் விவரங்களை சரியாக இணைக்க கூறுகிறோம்.
மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 1.5 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். கடந்த மாதம் உதவித்தொகை வரவு வைக்கப்படாதவர்களுக்கு, இம்மாதம் 3ம் தேதி, 2 மாதங்களுக்கான தொகை செலுத்தப்பட்டுள்ளது.
உதவித்தொகை கிடைக்காதவர்கள், வங்கிக் கணக்குடன் ஆதார் விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்’ என்றனர்.
