/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு குடியிருப்பில் நடந்த கொள்ளையில் மேலும் இருவர் சிறையிலடைப்பு
/
அரசு குடியிருப்பில் நடந்த கொள்ளையில் மேலும் இருவர் சிறையிலடைப்பு
அரசு குடியிருப்பில் நடந்த கொள்ளையில் மேலும் இருவர் சிறையிலடைப்பு
அரசு குடியிருப்பில் நடந்த கொள்ளையில் மேலும் இருவர் சிறையிலடைப்பு
ADDED : டிச 03, 2025 07:20 AM

கோவை: கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், கடந்த, 28ம் தேதி புகுந்த கொள்ளையர்கள், 13 வீடுகளில், 42 பவுன் நகைகள், ரூ.1.50 லட்சம், வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்தனர்.
இவ்வழக்கில், உத்திரபிரதேசத்தை சேர்ந்த இர்பான், 48, கல்லு ஆரிப், 60, ஆஷிப், 45 ஆகிய மூவரையும் போலீசார் சுட்டுப்பிடித்தனர். ஆஷிப், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
போலீசார் விசாரணையில் உத்திரபிரதேசத்தில் இருந்து வந்த, 12 பேர் கொண்ட கும்பல் குனியமுத்துார் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியது தெரிந்தது.
இவர் களில், தாவூத், பர்மான் ஆகியோர் பல்வேறு பகுதிகளில் நோட்ட மிட்டு கொள்ளையடிக்க திட்டமிட்டனர். இதற்காக இர்பான், கல்லு ஆரிப், ஆஷிப் ஆகியோரை வரவழைத்தனர். வீட்டில் தங்கியிருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் ஜமீர், பிரியான், வாசிம், ஆகியோர் மீது பல்வேறு வழக்குகள் இருந்தது தெரிந்தது.
விசாரணையில் அவர்களுக்கும் கொள்ளையில் தொடர்பு இருப்பது தெரிந்தது. உயிரிழந்த ஆஷிப்பின் தம்பி பிரியான், 23 மற்றும் தாவூத், 18 ஆகிய இருவரையும், நேற்று சிறையில் அடைத்தனர். மற்றவர்களிடம் விசாரணை நடக்கிறது.

