ADDED : ஜன 19, 2026 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: ஆர்.எஸ்.புரம் காமராஜர் நகரை சேர்ந்தவர் சந்திரசேகர், 66. பக்கவாத நோய்க்கு சிகிச்சை எடுத்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டு மாடியில் இருந்தவர், படி வழியாக இறங்கி கீழே வந்தார். அப்போது திடீரென அவருக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டது. தவறி விழுந்தார். பலத்த காயம் ஏற்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் உயிரிழந்தார். ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
* தொண்டாமுத்தூர் தேவராயபுரத்தை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் ரங்கநாதன், 45. நேற்று முன்தினம் கவுண்டம்பாளையம் பகுதியில் பணிக்கு சென்றார். அப்போது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். அவரை அருகிலிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். கவுண்டம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

