/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டடத்தை பிரிக்கும்போது விபத்து ஒடிசாவை சேர்ந்த இரண்டு பேர் பலி
/
கட்டடத்தை பிரிக்கும்போது விபத்து ஒடிசாவை சேர்ந்த இரண்டு பேர் பலி
கட்டடத்தை பிரிக்கும்போது விபத்து ஒடிசாவை சேர்ந்த இரண்டு பேர் பலி
கட்டடத்தை பிரிக்கும்போது விபத்து ஒடிசாவை சேர்ந்த இரண்டு பேர் பலி
ADDED : நவ 23, 2025 06:46 AM

நீலாங்கரை: இ.சி.ஆரில், தனியார் நிறுவன பழைய கட்டடத்தை பிரிக்கும் பணியில் ஈடுபட்ட ஒடிசாவைச் சேர்ந்த இரண்டு பேர், தவறி விழுந்து பலியாகினர்.
சென்னையைச் சேர்ந்தவர் அகமது இப்ராஹிம். இவர், பழைய கட்டடங்களை இடித்து, அதன் இரும்பு, மரம், ஓடுகள் உள்ளிட்ட பொருட்களை தனியாக பிரித்தெடுக்கும் தொழில் செய்து வருகிறார்.
இவர், இ.சி.ஆர்., வெட்டுவாங்கேணியில் உள்ள ஜெம் என்ற கம்பெனியை இடித்து, பொருட்களை பிரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார். இப்பணியில் ஒடிசாவைச் சேர்ந்த பாபு மாலிக், 32; சசிகாந்த் மாலிக், 48; ஆகியோர், நேற்று ஈடுபட்டிருந்தனர்.
மதியம், கூரையில் உள்ள ஓடுகளை பிரித்தெடுக்க, அதில் உள்ள கம்பிகளை வெட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக, 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தனர்.
பலத்த காயமடைந்த இருவரையும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி அரை மணி நேரத்தில் இரண்டு பேரும் பலியாகினர்.
நீலாங்கரை போலீசார் விசாரணையில், பாதுகாப்பு கட்டமைப்புகள் அமைக்காமல் பணியில் ஈடுபட்டது தெரிந்தது. இது தொடர்பாக, அகமது இப்ராஹிமிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

