/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கவுன்சிலர் மகன் உட்பட இருவர் விபத்தில் உயிரிழப்பு
/
கவுன்சிலர் மகன் உட்பட இருவர் விபத்தில் உயிரிழப்பு
ADDED : நவ 10, 2025 11:28 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே டிராக்டர் - பைக் மோதிய விபத்தில், தி.மு.க. கவுன்சிலர் மகன் உட்பட இருவர் உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர் புவனேஸ்வரி - இளங்கோவன் தம்பதியின் மகன் பரத்குமார், 33. அவரது நண்பரான தனியார் நிதி நிறுவன ஊழியர் சதாசிவம், 30. இருவரும், பைக்கில் வடக்கிப்பாளையத்தில் இருந்து புரவிபாளையத்துக்கு சென்றனர். பைக்கை சதாசிவம் ஓட்டி சென்றார்.
வாமனா கார்டன் அருகே சென்ற போது, எதிர்பாராதவிதமாக குறுக்கே வந்த டிராக்டர், பைக் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே சதாசிவம் இறந்தார். பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் பரத்குமார் இறந்தார்.
வடக்கிப்பாளையம் போலீசார், டிராக்டர் ஓட்டுநர் பக்கோதிபாளையத்தை சேர்ந்த விவேகானந்தன், 43, என்பவரிடம் விசாரிக்கின்றனர்.

