/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உறவுகளுடன் சேர்த்து வைக்கப்பட்ட இருவர்! அரசு மனநல சிகிச்சை மையத்தில் நெகிழ்ச்சி

ADDED : ஆக 23, 2025 02:53 AM
கோவை: தமிழக சுகாதாரத்துறை சார்பில், ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் மீள் மையம் ஜூனில் துவக்கப்பட்டது. மூன்று மாதத்தில், சாலையோரங்களில் ஆதரவின்றி சுகாதாரமற்ற முறையில் சுற்றித்திரிந்த ஏழு பேர் அழைத்து வரப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.
உடல் நல சிகிச்சை, மன நலம் மற்றும் பிசியோதெரபி, ஆர்ட் தெரபி உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. பொழுதுபோக்குக்காக, 'டிவி', கேரம், செஸ் போன்ற வசதிகளும் செய்யப்பட்டன. ஏழு பேரில் இருவர், அவர்களது குடும்பத்தாருடன் அனுப்பப்பட்டனர். ஹரியானாவை சேர்ந்த ஒருவர், அடுத்த மாதம் அனுப்பப்பட உள்ளார்.
திட்ட ஒருங்கிணைப்பாளர் சவுமியா மற்றும் சமூக பணியாளர் ஜெபின் ஜாஸ்பர் கூறியதாவது:
சாலையோரங்களில் இருந்து அழைத்து வரும்போது, கையாள்வதில் சிரமங்கள் இருக்கும். பழக பழக தெரிந்ததை பேசத்துவங்குவர். சில சிகிச்சைக்கு பின், சொந்த பெயர், ஊர் பெயரை இருவர் தெரிவித்தனர். போலீசார் உதவியுடன் உறவினர்களுடன் அனுப்பி வைத்தோம்.
ஹரியானாவை சேர்ந்த ஒருவர் பெயர், ஊரை தெரிவித்தபோது போலீசார் உதவியுடன் விசாரித்தோம். இரு ஆண்டுகளாக உறவினர்கள் தேடி வருவது தெரிந்தது.
'அப்பா பேசினாரா' 'அக்கா அழைக்க வருகிறாளா' என, திடீரென்று ஹிந்தியில் இவர் கேட்கும்போது, ஆழ்மனதில் ஏக்கங்கள் வெளிப்படுவதை காண முடிகிறது. அடுத்த மாதம் சொந்த ஊருக்கு அனுப்பி, சிகிச்சை எடுக்க உதவிகளை செய்கிறோம்.
பிரச்னை, கோபம், சண்டை எதுவானாலும் பேசுங்கள். பலர் கோபித்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியே வந்து, எங்கு செல்வது என தெரியாமல், மனநோயாளிகளாக மாறியுள்ளதை காண்கிறோம்.
வீடுகளில் அதீத அமைதியில் இருப்பவர்கள், அடிக்கடி சண்டையிடுபவர்கள் இருந்தால், பிரச்னைகளை கேட்டு, சரிசெய்தாலே உறவுகளை தொலைக்காமல் இருக்கலாம். எந்த உறவாக இருந்தாலும், மனம் விட்டு பேசுங்கள்; அனைத்தும் சுமூகமாகும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.