/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆன்லைனில் 'பார்ட் டைம்' வேலை 16 லட்சம் ரூபாய் இழந்த இருவர்
/
ஆன்லைனில் 'பார்ட் டைம்' வேலை 16 லட்சம் ரூபாய் இழந்த இருவர்
ஆன்லைனில் 'பார்ட் டைம்' வேலை 16 லட்சம் ரூபாய் இழந்த இருவர்
ஆன்லைனில் 'பார்ட் டைம்' வேலை 16 லட்சம் ரூபாய் இழந்த இருவர்
ADDED : ஏப் 12, 2025 11:36 PM
கோவை: ஆன்லைனில் பகுதி நேர வேலைவாய்ப்பு தருவதாக கூறி, இரு நபர்களிடம் ரூ. 16 லட்சம் மோசடி செய்தவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
கோவைப்புதுார், சுகுணாபுரத்தை சேர்ந்தவர் கலையரசன், 27; பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது 'வாட்ஸ் ஆப்' எண்ணுக்கு வந்த ஒரு குறுஞ்செய்தியில், வீட்டில் இருந்தபடியே சிறு சிறு 'டாஸ்க்' செய்தால், அதிக லாபம் சம்பாதிக்கலாம் என குறிப்பிட்டிருந்தது.
இதை நம்பிய கலையரசன், 'டாஸ்க்' செய்தார். அடுத்த கட்டத்திற்கு செல்ல பணம் செலுத்த கூறியுள்ளனர். அவர் ரூ.7.30 லட்சம் அனுப்பினார். அதன் பின், அவரால் பணத்தை திரும்ப எடுக்க முடியவில்லை.
மற்றொரு சம்பவம்
சாய்பாபா காலனியை சேர்ந்தவர் செந்தில்ராஜா, 46; ஆல்பம் டிசைனிங் வேலை செய்து வருகிறார். இவரது டெலிகிராம் எண்ணிற்கு வந்த ஒரு குறுஞ்செய்தியில், தினமும் 10 நிமிடம் செலவிட்டால், நல்ல வருமானம் ஈட்டலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த லிங்க்கை 'கிளிக்' செய்து உள்ளே சென்ற போது, டாஸ்க் செய்ய 'டெபாசிட்' தொகை செலுத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தது. அதன் படி அவர் செய்தபோது, ரூ.1,093 போனஸ் கிடைத்தது. இதனால், செந்தில்ராஜா அடுத்தடுத்து பல்வேறு தவணைகளில், ரூ. 8.82 லட்சத்தை முதலீடு செய்தார். ஆனால் அந்த பணத்தை, அவரால் வங்கி கணக்கிற்கு மாற்ற முடியவில்லை.
இரு சம்பவங்களிலும் பாதிக்கப்பட்ட இருவரும், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.