/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போகியத்திற்கு வீடு கொடுப்பதாக இருவரிடம் ரூ.27 லட்சம் மோசடி
/
போகியத்திற்கு வீடு கொடுப்பதாக இருவரிடம் ரூ.27 லட்சம் மோசடி
போகியத்திற்கு வீடு கொடுப்பதாக இருவரிடம் ரூ.27 லட்சம் மோசடி
போகியத்திற்கு வீடு கொடுப்பதாக இருவரிடம் ரூ.27 லட்சம் மோசடி
ADDED : டிச 08, 2024 03:01 AM
கோவை: வேறு ஒருவரின் வீட்டைதனது வீடு எனக்கூறி, இருவரிடம் ரூ. 27 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் வடவள்ளி, அருண் நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ், 30. இவர் ஆன்லைனில் 'ஆப்' வாயிலாக போகியத்திற்கு வீடு தேடி வந்தார். இந்நிலையில், வெங்கடேசின் மொபைல் எண்ணிற்கு ராஜசேகர் என்பவர் அழைத்தார். அவர், வடவள்ளி, ராஜன் நகர் பகுதியில் தனது சொந்தமான வீடு இருப்பதாகவும் அதை ரூ. 12 லட்சத்துக்கு போகியத்திற்கு கொடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, நேரில் சென்று பார்த்த வெங்கடேஷ், வீடு பிடித்து இருந்ததால், அங்கு குடியேற முடிவு செய்தார். பின்னர், பல்வேறு தவணைகளில் ரூ. 12 லட்சத்தை ராஜசேகருக்கு கொடுத்துள்ளார். கடந்த ஆக., மாதம் போகியத்திற்கு ஒப்பந்தம் போட்டுள்ளனர்.
இதன் பின்னர், வெங்கடேஷ் அந்த வீட்டில் குடியேறினார். குடியேறிய சில நாட்களில், ஆனந்தி என்பவர் அங்கு வந்து, வீட்டை தனது வீடு என தெரிவித்துள்ளார். இதனால், ஆனந்தி மற்றும் வெங்கடேஷ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ராஜசேகருக்கு போன் செய்த போது, அவரின் போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.
இது குறித்து, வெங்கடேஷ் விசாரித்தபோது, ஆனந்தியின் வீட்டை ராஜசேகர், தனது வீடு எனக்கூறி மோசடி செய்தது தெரியவந்தது. ராஜசேகர் இதே வீட்டை போகியத்திற்கு கொடுப்பதாக சசிக்குமார் என்பவரிடமும் ரூ. 15 லட்சம் பணம் பெற்று, மோசடி செய்ததும் தெரியவந்தது.
வெங்கடேஷ் வடவள்ளி போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் ராஜசேகர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.