/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொல்லத்திற்கு போத்தனுார் வழியாக இரண்டு வாராந்திர சிறப்பு ரயில்
/
கொல்லத்திற்கு போத்தனுார் வழியாக இரண்டு வாராந்திர சிறப்பு ரயில்
கொல்லத்திற்கு போத்தனுார் வழியாக இரண்டு வாராந்திர சிறப்பு ரயில்
கொல்லத்திற்கு போத்தனுார் வழியாக இரண்டு வாராந்திர சிறப்பு ரயில்
ADDED : நவ 09, 2025 12:29 AM
கோவை: கேரள மாநிலம்,கொல்லம் - ஆந்திர மாநிலம் நரசாபூர், தெலுங்கானா மாநிலம் சார்லாபள்ளி- கொல்லத்திற்கு இரண்டு வாரந்திர சிறப்பு ரயில், போத்தனுார் வழியாக இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் நரசாபூரிலிருந்து (வண்டி எண் 07105/07106) கேரள மாநிலம் கொல்லத்திற்கு வரும் 16ம் தேதி முதல், ஜன., 18 வரை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் நரசாபூரில் ஒவ்வொரு ஞாயிறும் பிற்பகல் 3:00 மணிக்கு புறப்பட்டு, விஜயாவாடா, ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார் பேட்டை, சேலம், திருப்பூர், போத்தனுார் வழியாக, திங்கள் கிழமை இரவு 10:00 மணிக்குகொல்லம் சென்றடையும். அதே போல மறுமார்க்கத்தில், வாரந்தோறும் செவ்வாய் கிழமை கொல்லத்தில் அதிகாலை 2:30 மணிக்கு புறப்பட்டு, புதன் கிழமை காலை 7:00 மணிக்கு நரசாபூர் சென்றடையும்.
தெலுங்கானா மாநிலம் சார்லாபள்ளி- கேரள மாநிலம், கொல்லத்திற்குவரும் 17 ம்தேதி முதல் ஜன., 19 வரை வாரந்திர சிறப்பு ரயில் (வண்டி எண் 07107/ 07108) இயக்கப் படுகிறது.
இந்த ரயில்சார்லா பள்ளியிலிருந்து திங்கள் கிழமை தோறும் மதியம் 12:00 மணிக்கு புறப்பட்டு, செவ்வாய் இரவு 10 மணிக்கு, கொல்லம் சென்றடையும். மறு மார்க்கத்தில்கொல்லத்தில், புதன் கிழமை தோறும்,காலை 2:30மணிக்கு புறப்பட்டு, சார்லாபள்ளிக்கு வியாழன் காலை 10:30 மணிக்கு சென்றடையும். சிறப்பு ரயில்களில் பயணிக்க இன்று முதல் முன் பதிவு துவங்குகிறது.

