/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டூ - வீலர் மோதல் பெண் எஸ்.ஐ., பலி
/
டூ - வீலர் மோதல் பெண் எஸ்.ஐ., பலி
ADDED : நவ 02, 2024 02:26 AM

பொள்ளாச்சி:கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே அங்கலக்குறிச்சியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி, 51. இவர், வால்பாறை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ்.ஐ.,யாக பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை, டூ - வீலரில் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். அப்போது, வள்ளியம்மாள் தியேட்டர் அருகே எதிரே பைக்கில் வந்த அங்கலக்குறிச்சியைச் சேர்ந்த சிவகுமார், 21, கிருஷ்ணவேணி வாகனம் மீது மோதியதில், இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
கோவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கிருஷ்ணவேணி வழியிலேயே இறந்தார்.
சிவகுமார் சிகிச்சையில் உள்ளார். கோட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர். கிருஷ்ணவேணி குடும்பத்தாருக்கு, முதல்வர் 25 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார்.