/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாகன விபத்தில் இரு பெண்கள் காயம்
/
வாகன விபத்தில் இரு பெண்கள் காயம்
ADDED : டிச 06, 2024 11:08 PM
கிணத்துக்கடவு, ; கிணத்துக்கடவு, அரசம்பாளையம் பிரிவில் ரோட்டை கடந்த பெண்கள் மீது, டிப்பர் லாரி மோதியதில், படுகாயமடைந்தனர்.
கிணத்துக்கடவு, சொலவம்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் வீராள், 55, மற்றும் பாப்பாத்தி, 65. இவர்கள் இருவரும் சிக்கலாம்பாளையம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்பியுள்ளனர்.
அப்போது, அரசம்பாளையம் பிரிவில் இருந்து, பொள்ளாச்சி --- கோவை ரோட்டை கடந்து சென்றனர். அப்போது, அவ்வழியே வந்த டி.என் 38 பிஒய் 6008 என்ற பதிவு எண் கொண்ட டிப்பர் லாரி அவர்கள் இருவர் மீதும் மோதியது. அங்கிருந்தவர்கள், விபத்தில் காயமடைந்த இருவரையும் மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். இதுகுறித்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.