ADDED : செப் 02, 2026 06:03 PM
கோவை: எஸ்.என்.எஸ்., கல்வி நிறுவனங்கள், இந்திய மருத்துவக் கழகம்(ஐ.எம்.ஏ.,) கோவை கிளை, பொன்னம்மாள் துரைசாமி கண் மருத்துவமனை, ஐஸ்வர்யா மருத்துவமனை இனைந்து நடத்திய நிகழ்ச்சியில் 2 உலக சாதனைகள் படைக்கப்பட்டன.
அமெரிக்காவின் எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் இச்சாதனைகளை அங்கீகரித்துள்ளது. எஸ்.என்.எஸ்., கல்வி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2,074 மாணவர்கள் பங்கேற்றனர்.
ஒரே இடத்தில் அதிக மாணவர்கள் பங்கேற்ற, அடிப்படை உயிர்காக்கும் முறைகள் பயிற்சி மற்றும் தனிநபர், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி என இரு சாதனைகள் படைக்கப்பட்டன.
எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப இயக்குநர் நளின், இந்திய மருத்துவக் கழகம் கோவை கிளை தலைவர் டாக்டர் கோஷல் ராம், ஐ.எம்.ஏ., கோவை கிளை மகளிர் டாக்டர்கள் பிரிவு தலைவர் டாக்டர் அனுஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
