/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர்களுக்கு கஞ்சா விற்ற இரு வாலிபர்களுக்கு சிறை
/
மாணவர்களுக்கு கஞ்சா விற்ற இரு வாலிபர்களுக்கு சிறை
ADDED : அக் 04, 2025 11:42 PM
கோவை: பீளமேடு போலீசார் டைடல் பார்க் பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள ரயில்வே மேம்பாலம் அருகில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த, இரு வாலிபர்களிடம் விசாரித்தபோது, முறையாக பதில் அளிக்கவில்லை. சோதனையில் இருவரிடமும் கஞ்சா இருந்தது.
அவர்கள், கோவை சவுரிபாளையம், சாமியார் வீதியை சேர்ந்த முகிலன், 20, கள்ளக்குறிச்சி சித்திரையை சேர்ந்த அருண் குமார், 25 எனத் தெரிந்தது.
முகிலன் கல்லுாரியில் படித்து வருவதும், அருண்குமார் கல்லுாரி முடித்து விட்டு, கோவை சிட்ரா பகுதியில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.
இருவரும், கல்லுாரி மாணவர்களின் அறைகளில் தங்கி, கல்லுாரி மாணவர்களுக்கு, கஞ்சா விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.
இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த நபர்கள் குறித்து, விசாரித்து வருகின்றனர்.