/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
180-200 மீ. இடைவெளியில் 'யூ டேர்ன்': நவஇந்தியா சந்திப்பு அருகே அவசியம்
/
180-200 மீ. இடைவெளியில் 'யூ டேர்ன்': நவஇந்தியா சந்திப்பு அருகே அவசியம்
180-200 மீ. இடைவெளியில் 'யூ டேர்ன்': நவஇந்தியா சந்திப்பு அருகே அவசியம்
180-200 மீ. இடைவெளியில் 'யூ டேர்ன்': நவஇந்தியா சந்திப்பு அருகே அவசியம்
ADDED : நவ 26, 2025 07:18 AM

கோவை: நவஇந்தியா சந்திப்பில் இருந்த சிக்னல் அகற்றப்பட்டு, 180 - 200 மீட்டர் இடைவெளியில் 'யூ டேர்ன்' வசதி செய்யப்பட்டிருந்தது. சிரமமின்றி வாகன ஓட்டிகள் பயணித்து வந்தனர்.
மையத்தடுப்பு கட்டியபோது, அளவீடு செய்து, 'யூ டேர்ன்' வடிவமைப்பு கட்டாமல், தொடர்ச்சியாக கட்டப்பட்டு விட்டன. இதன் காரணமாக, இந்துஸ்தான் கல்லுாரி பகுதிக்குச் செல்ல வேண்டியவர்கள், பீளமேடு அண்ணா நகர் சந்திப்பு வரை சென்று, திரும்பி வர வேண்டியுள்ளது. எஸ்.என்.ஆர். ரோட்டுக்குச் செல்ல வேண்டியவர்கள், லட்சுமி மில்ஸ் நோக்கி வெகுதுாரம் சென்று, 'யூ டேர்ன்' செய்து திரும்பி வர வேண்டியுள்ளது. பள்ளி, கல்லுாரிகளுக்கு மாணவ, மாணவியரை அழைத்துச் செல்லும் பெற்றோர் சிரமப்படுகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில், நவ இந்தியா சந்திப் பு அருகே ஏற்கனவே இருந்தது போல், 180-200 மீட்டர் இடைவெளியில், 'யூ டேர்ன்' வசதி ஏற்படுத்த வேண்டும்.
இதற்கு பதிலாக, சிக்னல் நடைமுறையை மீண்டும் கொண்டு வந்தால், வா கனங்கள் தேங்க ஆரம்பித்து விடும். எனவே, மையத்தடுப்பை இடித்து, தேவையான இடத்தில், 'யூ டேர்ன்' வசதி ஏற்படுத்த மாநில நெடுஞ்சாலைத்துறையும், போலீசாரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண் டும்.

