தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'டோல்கேட்' கட்டணம் குறைக்கணும்: உடுமலை எம்.எல்.ஏ., கோரிக்கை 

'டோல்கேட்' கட்டணம் குறைக்கணும்: உடுமலை எம்.எல்.ஏ., கோரிக்கை 

'டோல்கேட்' கட்டணம் குறைக்கணும்: உடுமலை எம்.எல்.ஏ., கோரிக்கை 


UPDATED : ஆக 19, 2026 05:46 PM

ADDED : ஆக 19, 2026 05:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 19, 2026 05:46 PM ADDED : ஆக 19, 2026 05:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை: கோமங்கலம் டோல்கேட் கட்டணத்தை குறைக்க வேண்டும் என சட்டசபையில் உடுமலை எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.

பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மானியக்கோரிக்கை விவாதத்தில், உடுமலை எம்.எல்.ஏ., ஜெயக்குமார், தேசிய நெடுஞ்சாலையில் கோமங்கலம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் டோல்கேட் அமைத்து பயன்பாட்டில் உள்ளது.

இதனால், உடுமலை, பொள்ளாச்சி சுற்றுப்பகுதி மக்களும், அரசு மற்றும் தனியார் பஸ், சுற்றுலா வாகன உரிமையாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் இரண்டரை கி.மீ., துாரத்தை ஒரு முறை பயன்படுத்த, ரூ.250 வரை செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது.

கட்டணத்தை குறைக்க மனு கொடுத்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் பேசி கோமங்கலம் டோல்கேட் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் அல்லது வேறு இடத்தில் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, பேசியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us