/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யு.ஐ.டி., டிராபி கிரிக்கெட் போட்டி; குமரகுரு, அண்ணா பல்கலை வெற்றி
/
யு.ஐ.டி., டிராபி கிரிக்கெட் போட்டி; குமரகுரு, அண்ணா பல்கலை வெற்றி
யு.ஐ.டி., டிராபி கிரிக்கெட் போட்டி; குமரகுரு, அண்ணா பல்கலை வெற்றி
யு.ஐ.டி., டிராபி கிரிக்கெட் போட்டி; குமரகுரு, அண்ணா பல்கலை வெற்றி
ADDED : டிச 30, 2024 12:10 AM

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்த, இன்ஜினியரிங் கல்லூரி ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில், குமரகுரு இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் அண்ணா பல்கலை அணிகள் வெற்றி பெற்றன.
போட்டியில், அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 14 இன்ஜினியரிங் கல்லூரி ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். முதல் போட்டியில், குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி அணி, எஸ்.என்.எஸ்., தொழில் நுட்ப கல்லூரி அணியை வென்றது.
இரண்டாவது போட்டியில், அண்ணா பல்கலை அணி, யுனைடெட் தொழில்நுட்ப கல்லூரி அணியை வென்றது. மூன்றாவது போட்டியில், கற்பகம் இன்ஜினியரிங் கல்லூரி அணி, விவேகானந்தா கல்லூரி அணியை வென்றது.
போட்டிகளை, ஞாயிறுதோறும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் போட்டிகளை, யுனைடெட் கல்வி நிறுவனங்களின் தலைவர் சண்முகம், இணை தலைவர் மைதிலி ஆகியோர் துவக்கி வைத்தனர். உடற்கல்வி இயக்குனர் ரவிச்சந்திரன், ஏற்பாடுகளை செய்து இருந்தார்.