/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உக்கடம் பஸ் ஸ்டாண்ட் பணியில்.. வேகம் . ஒரே மாதத்தில் பயனுக்கு தயாராகி விடும்
/
உக்கடம் பஸ் ஸ்டாண்ட் பணியில்.. வேகம் . ஒரே மாதத்தில் பயனுக்கு தயாராகி விடும்
உக்கடம் பஸ் ஸ்டாண்ட் பணியில்.. வேகம் . ஒரே மாதத்தில் பயனுக்கு தயாராகி விடும்
உக்கடம் பஸ் ஸ்டாண்ட் பணியில்.. வேகம் . ஒரே மாதத்தில் பயனுக்கு தயாராகி விடும்
ADDED : பிப் 01, 2026 05:06 AM

கோவை :உக்கடம் பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன. இம்மாத இறுதியில் தயாராகி விடும்.
ரூ.21.55 கோடியில் உக்கடம் பஸ் ஸ்டாண்ட் இரு முனையங்களாக கட்டப்படுகிறது. செல்வபுரம் பைபாஸில் மேம்பாலம் இறங்கு தளத்துக்கு அருகே உள்ள காலியிடத்தில் கட்டப்படும் முனையம்-1ல், ஒரே நேரத்தில் 28 பஸ்கள் நிறுத்தலாம்.
கடைகள், கழிப்பறை வசதி ஏற்படுத்தப்படுகிறது. உணவகம், பயணச்சீட்டு முன்பதிவு அறை, கண்காணிப்பு அறை அமைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.11.10 கோடி செலவிடப்படுகிறது. தற்போது பஸ் ஸ்டாண்ட் செயல்படும் இடத்தில் முனையம்-2 உருவாகிறது. இதற்கு ரூ.10.45 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. 30 பஸ்கள் நிறுத்த ரேக் வசதி வருகிறது.
முதல்கட்டமாக, முனையம்-1 பணியை இம்மாத இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பணிகள் வேகப்படுத்தப்பட்டு உள்ளன.
பஸ்கள் பேரூர் பைபாஸ் வழியாகச் சென்று, பழைய மீன் மார்க்கெட் இருந்த இடம் வழியாகச் சென்று வலது புறம் திரும்பி, பஸ் ஸ்டாண்ட்டுக்குள் நுழையும் வகையில் கட்டப்படுகிறது.
இம்மாத இறுதியில் முதல்வர் ஸ்டாலின் கோவை வருகிறார். அப்போது, காந்திபுரம் நுாலகம், மேற்குப்புறவழிச்சாலை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அச்சமயம் உக்கடம் பஸ் ஸ்டாண்ட்டையும் திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'முனையம்-1 மட்டும் பிப். இறுதிக்குள் முடிக்கப்படும். முனையம்-2 இன்னும் சில மாதங்களாகும்' என்றனர்.

