/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூடப்படாத மழைநீர் வடிகால்; விபத்து ஏற்படும் அபாயம்
/
மூடப்படாத மழைநீர் வடிகால்; விபத்து ஏற்படும் அபாயம்
மூடப்படாத மழைநீர் வடிகால்; விபத்து ஏற்படும் அபாயம்
மூடப்படாத மழைநீர் வடிகால்; விபத்து ஏற்படும் அபாயம்
ADDED : நவ 24, 2024 11:12 PM

கால்வாய் ரோடு சேதம்
பொள்ளாச்சி, ஜமீன்கோட்டம்பட்டியில் உள்ள கால்வாய் மேல்பகுதி ரோடு சேதம் அடைந்திருப்பதால், வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் இவ்வழியில் நடந்து செல்பவர்கள் சிலர் தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. இதை ஊராட்சி நிர்வாகம் கவனித்து, பொதுமக்கள் நலன் கருதி விரைவில் சீரமைக்க வேண்டும்.
- -சியாமலா தேவி, ஜமீன்கோட்டம்பட்டி.
குழியான ரோடு
கிணத்துக்கடவு, பகவதிபாளையம் செல்லும் ரோட்டில் தனியார் கல்லூரி அருகே ரோட்டில் பள்ளம் போன்ற குழி ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக இரவு நேரத்தில் செல்பவர்கள் கீழே விழுவதால் இந்த ரோட்டை விரைவில் சரி செய்ய வேண்டும்.
- - ஜகன், கிணத்துக்கடவு.
சேதமான டிரான்ஸ்பார்மர் கம்பம்
சூளேஸ்வரன்பட்டி, கணேஷ் டிபார்ட்மென்ட் எதிரில் உள்ள டிரான்ஸ்பார்மர் கம்பம் பழுதடைந்து காணப்படுகிறது. இது எந்த நேரத்திலும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது. இதை மின் வாரியத்துறை அதிகாரிகள் கவனித்து விரைவில் சரி மாற்ற செய்ய வேண்டும்.
-- ஆனந்த், பொள்ளாச்சி.
வீணாகும் குப்பை தொட்டி
கிணத்துக்கடவு ஒன்றியத்தில் பல பகுதியில் குப்பை தொட்டி சேதம் அடைந்த நிலையில் உள்ளது. இதனால் பல இடங்களில் குப்பையை பொதுமக்கள் திறந்த வெளியில் கொட்டி செல்லும் நிலை உள்ளது. எனவே, அந்தந்த ஊராட்சி சார்பில் சேதம் அடைந்த குப்பை தொட்டியை மாற்ற வேண்டும்.
- -பிரபு, கிணத்துக்கடவு.
தண்ணீர் தொட்டியின் கீழ் புதர்
கிணத்துக்கடவு, மாசநாயக்கன்புதுாரில் மேல் நிலை தண்ணீர் தொட்டி கீழ் பகுதியில் செடிகள் நிறைந்து உள்ளது. இங்கு மாலை நேரத்தில் அதிக அளவு கொசுத்தொல்லை இருப்பதால் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதை ஊராட்சி நிர்வாகம் சார்பில் சரி செய்ய வேண்டும்.
- - ஆறுச்சாமி, நெகமம்.
வாகன ஓட்டுநர்களுக்கு இடையூறு
உடுமலை, தளிரோடு சத்திரம் வீதி சந்திப்பு அருகே வைக்கப்பட்டுள்ள 'நோ பார்க்கிங்' அறிவிப்பின் கீழ் உள்ள விளம்பர பலகை வாகன ஓட்டுநர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எதிர்பாராமல் ரோட்டோரத்தில் செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு பலகை இடித்து விபத்து ஏற்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செல்வி, உடுமலை.
சுகாதாரம் இல்லை
உடுமலை, குட்டை திடலில் நுாலகம் பின்புறம் திறந்த வெளிக்கழிப்பிடமாக அசுத்தமாகி வருகிறது. இதனால் நுாலகத்திலும் மிகுதியான துர்நாற்றம் வீசுகிறது. அப்பகுதியில் பொதுமக்கள் கடந்து செல்வதற்கும் முடியாமல் முகம் சுழிக்கின்றனர்.
- விஜயகுமார், உடுமலை.
மின்கம்பம் சேதம்
உடுமலை நகரில் 23வது வார்டில், இரண்டு மின் கம்பங்களின் அடிபாகம் கான்கிரீட் தளம் சிதிலமடைந்துள்ளது. இதனால் மின் கம்பம் கீழே சரிந்து விழும் அபாயம் உள்ளது. ஆபத்தை உணராமல் மின்பணியாளர்களும் கம்பத்தில் ஏறி பணியாற்றுகின்றனர். இதை மின்வாரியத்தினர் சரிசெய்ய வேண்டும்.
- ராஜ்குமார், உடுமலை.
ரோட்டில் ஆக்கிரமிப்பு
உடுமலை, வ.உ.சி வீதியில் வணிக கடைகளின் பொருட்கள் ரோட்டோர நடைபாதையில் வைத்து ஆக்கிரமிக்கின்றனர். இதனால் பாதசாரிகள் நடப்பதற்கு வழியில்லாமல் ரோட்டில் செல்ல வேண்டியுள்ளது. மேலும், வாகனங்களும் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
- ராகவன், உடுமலை.
மூடாத மழைநீர் வடிகால்
உடுமலை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் மழை நீர் வடிகால் முடப்படாமல் உள்ளது. இதனால், விபத்துகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. இதை நகராட்சி அதிகாரிகள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கணேஷ், உடுமலை.