/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சி.டி.சி.ஏ. லீக் நுழைவு 'நாக்-அவுட்' 5 விக்கெட் வீழ்த்திய யுனைடெட் வீரர்
/
சி.டி.சி.ஏ. லீக் நுழைவு 'நாக்-அவுட்' 5 விக்கெட் வீழ்த்திய யுனைடெட் வீரர்
சி.டி.சி.ஏ. லீக் நுழைவு 'நாக்-அவுட்' 5 விக்கெட் வீழ்த்திய யுனைடெட் வீரர்
சி.டி.சி.ஏ. லீக் நுழைவு 'நாக்-அவுட்' 5 விக்கெட் வீழ்த்திய யுனைடெட் வீரர்
ADDED : டிச 26, 2025 05:07 AM

கோவை, கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில் 'லீக்' நுழைவுக்கான நாக்-அவுட் போட்டி எஸ்.என்.எம்.வி., உள்ளிட்ட மைதனாங்களில் நடக்கிறது. கள்ளிபாளையம் கிரிக்கெட் கிளப் அணியும், வூடூ அணியும் மோதின.
பேட்டிங் செய்த, கள்ளிபாளையம் அணியினர், 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 84 ரன் எடுத்தனர். எதிரணி வீரர் கிருஷ்ணன் நான்கு விக்கெட், அஜித்குமார் மூன்று விக்கெட் வீழ்த்தினர். வூடூ அணியினர், 14.1 ஓவரில் நான்கு விக்கெட் இழப்புக்கு, 87 ரன் எடுத்தனர்.
தொடர்ந்து, கனகராஜ் நினைவு கிரிக்கெட் அணியும், டேவிட் கோவை டிரீம்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும் மோதின. பேட்டிங் செய்த கனகராஜ் நினைவு கிரிக்கெட் கிளப் அணியினர், 25 ஓவரில் ஆறு விக்கெட் இழப்புக்கு, 123 ரன் எடுத்தனர்.
டேவிட் கோவை டிரீம்ஸ் அணியினர், 21.3 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு, 124 ரன் எடுத்து வெற்றி பெற்றனர். வீரர் மகேந்திரன், 59 ரன் எடுத்தார். எதிரணி வீரர் விஜய் மூன்று விக்கெட் வீழ்த்தினார். கே.பி.கே., சி.சி., அணியும், யுனைடெட் கிரிக்கெட் கிளப் அணியும் மோதின.
கே.பி.கே., அணியினர், 24.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 117 ரன் எடுத்தனர். வீரர் ராஜசேகர், 43 ரன் எடுத்தார். எதிரணி வீரர் விஜய பாலகுரு ஐந்து விக்கெட் வீழ்த்தினார். யுனைடெட் கிரிக்கெட் கிளப் அணியினர், 16.4 ஓவரில் மூன்று விக்கெட் இழப்புக்கு, 119 ரன் எடுத்தனர். வீரர் விஜய பாலகுரு, 32 ரன், ராமச்சந்திரன், 39 ரன் எடுத்தனர். தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன.

