/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பல்கலைகளுக்கான தடகளம்; வீரர், வீராங்கனைகள், 'ரெடி'
/
பல்கலைகளுக்கான தடகளம்; வீரர், வீராங்கனைகள், 'ரெடி'
பல்கலைகளுக்கான தடகளம்; வீரர், வீராங்கனைகள், 'ரெடி'
பல்கலைகளுக்கான தடகளம்; வீரர், வீராங்கனைகள், 'ரெடி'
ADDED : டிச 24, 2024 07:17 AM
கோவை; ஒடிசாவில் நடக்கும் பல்கலைகளுக்கு இடையேயான தடகள போட்டியில் வீரர், வீராங்கனைகள், 51 பேர் பாரதியார் பல்கலை சார்பில் பங்கேற்கின்றனர்.
அனைந்திந்திய பல்கலைகளுக்கு இடையே,இரு பாலருக்குமான தடகள போட்டிகள் வரும், 26 முதல், 30ம் தேதி வரை, ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள, கலிங்கா சமூக அறிவியல் கல்வி நிறுவனத்தில் நடக்கிறது.
கடந்த, 20ம் தேதி இதற்கான முன்பதிவுகள் முடிவடைந்தன. பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான தடகள போட்டிகள் சமீபத்தில் நடந்தன.
இதில், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், தடை தாண்டுதல், ஓட்டம், அரை மாரத்தான் என, பல்வேறு பிரிவுகளில் வீரர், வீராங்கனைகள் அசத்தினர்.
இதில் சிறப்பான முறையில் திறமையை வெளிப்படுத்திய, 29 வீரர்கள், 22 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்கள், பல்கலைகளுக்கு இடையேயான தடகள போட்டியில் பங்கேற்க உள்ளதாக, பாரதியார் பல்கலை உடற்கல்வி இயக்குனர் ராஜேஸ்வரன் தெரிவித்தார்.