/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பல்கலை 'பால் பேட்மின்டன்' போட்டி; குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி அபாரம்
/
பல்கலை 'பால் பேட்மின்டன்' போட்டி; குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி அபாரம்
பல்கலை 'பால் பேட்மின்டன்' போட்டி; குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி அபாரம்
பல்கலை 'பால் பேட்மின்டன்' போட்டி; குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி அபாரம்
ADDED : அக் 17, 2024 11:38 PM

கோவை : இன்ஜி., கல்லுாரிகளுக்கு இடையேயான, 'பால் பேட்மின்டன்' போட்டியில் குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி அணி முதலிடம் பிடித்தது.
அண்ணா பல்கலைக்குட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே(11வது மண்டலம்) பெண்களுக்கான பால் பேட்மின்டன் போட்டி ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி மைதானத்தில் நேற்று நடந்தது. நான்கு அணிகள் பங்கேற்ற இப்போட்டியை, கல்லுாரி முதல்வர் சவுந்தர்ராஜன் தொடங்கி வைத்தார்.
முதல் அரை இறுதியில் ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி மற்றும் எஸ்.என்.எஸ்., தொழில்நுட்பக் கல்லுாரி அணிகள் மோதின. இதில், எஸ்.என்.எஸ்., அணியினர், 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றனர். இரண்டாம் அரையிறுதியில் குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில் அரசு தொழில்நுட்ப கல்லுாரி அணியை வென்றது.
இறுதிப்போட்டியில் குமரகுரு கல்லுாரி அணி, எஸ்.என்.எஸ்., கல்லுாரி அணியை, 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது. மூன்றாம் இடத்திற்கான போட்டியில் ராமகிருஷ்ணா கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில் அரசு தொழில்நுட்ப கல்லுாரி அணியை வென்று மூன்றாம் இடம் பிடித்தது.
வெற்றி பெற்ற அணியினருக்கு ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி இயக்குனர் அலமேலு சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கி பாராட்டினார்.
கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் நித்தியானந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.