/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேம்பாலத்தில் ஒளிராத தெருவிளக்குகள்; ஓட்டுநர்கள் தடுமாற்றம்
/
மேம்பாலத்தில் ஒளிராத தெருவிளக்குகள்; ஓட்டுநர்கள் தடுமாற்றம்
மேம்பாலத்தில் ஒளிராத தெருவிளக்குகள்; ஓட்டுநர்கள் தடுமாற்றம்
மேம்பாலத்தில் ஒளிராத தெருவிளக்குகள்; ஓட்டுநர்கள் தடுமாற்றம்
ADDED : அக் 28, 2024 12:26 AM

செடியை அகற்றுங்க!
பொள்ளாச்சி, வெள்ளையம்மாள் லே-அவுட் குடியிருப்பு பகுதியில், ரோட்டின் ஓரத்தில் செடிகள் அகற்றம் செய்து, அங்கேயே போடப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதை தூய்மை பணியாளர்கள் அகற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- -ராஜ், பொள்ளாச்சி.
தெருவிளக்கு எரியல!
பொள்ளாச்சி - கோட்டூர் ரோடு மேம்பாலத்தில் உள்ள மின்விளக்குகள், பல நாட்களாக எரியவில்லை. இதனால், வாகன ஓட்டுநர்கள் இரவு நேர பயணத்தின் போது தடுமாறும் நிலை உள்ளது. எனவே, மின்விளக்குகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- -டேவிட், பொள்ளாச்சி.
கிடப்பில் ரோடு பணி
கிணத்துக்கடவு, அண்ணா நகரில் இரண்டு தெருக்களில் ரோடு சீரமைப்பு பணி, பாதியில் உள்ளது. இதனால், குடியிருப்பு பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மக்கள் நலன் கருதி ரோடு சீரமைப்பு பணியை விரைவில் நிறைவு செய்து, பயன்பாட்டிற்கு விட வேண்டும்.
-- -ரஞ்சித், கிணத்துக்கடவு.
ரோட்டில் கால்நடைகள்
பொள்ளாச்சி, விஜயபுரம் அருகே அதிகளவு ஆடுகள் மேய்ச்சலுக்கு விடப்படுவதால், ரோட்டில் பயணிக்கும் வாகன ஓட்டுநர்களுக்கு சிரமம் ஏற்படுவதுடன், விபத்து அபாயம் உள்ளது. எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி, ரோட்டில் ஆடுகள் உலா வருவதை, அவற்றின் உரிமையாளர்கள் கட்டுப்படுத்த வேண்டும்.
-- -யஸ்வந்த், பொள்ளாச்சி.
நீரோடையில் குப்பை
கிணத்துக்கடவு, ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள மாமாங்கம் நீரோடையில் அதிகளவு பிளாஸ்டிக்கழிவு கொட்டிக்கிடப்பதால், தண்ணீர் மாசுபடுகிறது. நீர்நிலை அருகில் செல்லும் போது துர்நாற்றம் வீசுகிறது. இதை பேரூராட்சி நிர்வாகம் கவனித்து, குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- -மோகன், கிணத்துக்கடவு.
மழைநீர் தேக்கம்
உடுமலை நகராட்சி பீர் கவுஸ் லே அவுட் வீதியில், மழைநீர் தேங்கி அகற்றப்படாமல் உள்ளது. இதனால், துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தேங்கிய நீரை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுரேஷ், உடுமலை.
நாய்த்தொல்லை
உடுமலை அனுசம் ரோட்டில், தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் நிம்மதியாக நடந்து செல்வதற்கும் விடாமல் தெருநாய்கள் துரத்துவதும், அச்சுறுத்தும் வகையில் சத்தமிடுகின்றன. இரவு நேரங்களில் வாகன ஓட்டுநர்களை துரத்திச்செல்வதால், அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்.
- விஷ்ணுவர்தன், உடுமலை.
சுகாதாரம் பாதிப்பு
ஏரிப்பாளையம், அரசு பள்ளி அருகே குப்பைக்கழிவுகள் தொடர்ந்து கொட்டப்படுகின்றன. கழிவுகள் மலையாக குவிந்துள்ளதால் பள்ளி வளாகத்திலும் மிகுதியான துர்நாற்றம் வீசுகிறது. தெருநாய்கள் கழிவுகளை இழுத்துவந்து பள்ளி முன் போடுவதால், பள்ளியின் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும், கழிவுகள் கொட்டப்படுவதால், பள்ளியின் பின்புறம் திறந்தவெளிக்கழிப்பிடமாகவும் மாறுகிறது.
- காயத்ரி, உடுமலை.
தெருவிளக்குகள் எரிவதில்லை
உடுமலை, செல்லமுத்து வீதியில் தெருவிளக்குகள் சரியாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டுநர்கள் அவ்வழியாக செல்வதற்கு சிரமப்படுகின்றனர். மாலையில் இருள் சூழ்ந்திருப்பதால், முதியவர்களும், அப்பகுதி மக்களும் வீதியில் நடப்பதற்கும் அச்சப்படுகின்றனர். திருட்டு பயமும் ஏற்படுகிறது.
- சாமிநாதன், உடுமலை.
குப்பை எரிப்பு
உடுமலை, பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் குப்பைக்கழிவுகளை பொதுமக்கள் நடந்து செல்லும் வழியில் குவித்து எரிக்கின்றனர். கழிவுகளை எரிப்பதிலிருந்து பரவும் புகையால் அவ்வழியாக செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். மேலும் அருகில் கடைகள் இருப்பதால், தீப்பொறி பரவும் என அச்சப்படுகின்றனர். நடைபாதையில் கழிவுகளை எரிப்பதை கட்டுப்படுத்த வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.
- மாரிமுத்து, உடுமலை.