/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பதிவு செய்யாத முதியோர் இல்லங்களுக்கு 'சீல்'; மாவட்ட நிர்வாகம் கடும் எச்சரிக்கை
/
பதிவு செய்யாத முதியோர் இல்லங்களுக்கு 'சீல்'; மாவட்ட நிர்வாகம் கடும் எச்சரிக்கை
பதிவு செய்யாத முதியோர் இல்லங்களுக்கு 'சீல்'; மாவட்ட நிர்வாகம் கடும் எச்சரிக்கை
பதிவு செய்யாத முதியோர் இல்லங்களுக்கு 'சீல்'; மாவட்ட நிர்வாகம் கடும் எச்சரிக்கை
ADDED : ஜூலை 02, 2025 10:20 PM
கோவை; கோவை மாவட்டத்தில் பதிவு பெறாமல் செயல்படும் குழந்தைகள், முதியோர் இல்லங்கள், பதிவு செய்ய தவறினால் சீல் வைக்கப்படும் என்று, மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
கலெக்டர் அறிக்கை:
பதிவு பெறாமல் செயல்படும், குழந்தைகள், பெண்கள், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மனவளர்ச்சி குன்றியோர், மாற்றுத்திறனாளிகள், போதைபொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள் மற்றும் விடுதிகள் இணையத்தில், பதிவு செய்யப்பட வேண்டும்.
பதிவு செய்யாதவர்கள் ஒரு மாத கால அவகாசத்தில் சம்மந்தப்பட்ட அலுவலகத்தை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும். குழந்தைகள் இல்லம் நடத்துவோர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தை, https://dsdcpimms.tn.gov.in என்ற முகவரியில் தொடர்பு கொண்டு, பதிவு செய்யலாம்.
முதியோர் இல்லம் நடத்துவோர், https://www.seniorcitizenhomes.tnsocialwelfare.tn.gov.in என்ற முகவரியிலோ மாவட்ட சமூக நல அலுவலகத்திலோ பதிவு செய்யலாம். மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்களை நடத்துபவர்கள் https://scd.tn.gov.in என்று இணைய முகவரியிலோ, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம்.
மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள் நடத்துபவர்கள், https://scd.tn.gov.in என்ற இணைய முகவரியிலோ மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலோ பதிவு செய்யலாம்.
போதைபொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்களை நடத்துபவர்கள், https:// tnhealth.tn.gov.in/tngovin/dme/dme.php என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் நடத்துபவர்கள், https://tnswp.com எனும் இணைய முகவரியில், மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லம் நடத்துவோர், https://tnhealth.tn.gov.in/tngovin/dme/dme.php இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
ஒரு மாத கால அவகாசத்தில் பதிவு செய்யாமல் இயங்கும் அனைத்து இல்லங்கள் மற்றும் விடுதிகள் பூட்டி சீல் வைக்கப்படும்.