ரவுண்டானா சந்திப்பு பகுதியில் மேம்படுத்தும் பணி துவக்கம்
ரவுண்டானா சந்திப்பு பகுதியில் மேம்படுத்தும் பணி துவக்கம்
UPDATED : நவ 26, 2026 05:24 PM
ADDED : நவ 26, 2026 05:24 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், ரவுண்டானா சந்திப்பு பகுதிகளை அழகுபடுத்தி மேம்படுத்தும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
கோவை கலெக்டர் உத்தரவின்படி, பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் உள்ள எட்டு ரவுண்டானாக்கள், ஆறு இடங்களில் மைய தடுப்புகள் அழகுப்படுத்துதல் பணி, சி.எஸ்.ஆர்., நிதியில் மேற்கொள்ளப்பட உள்ளது.
உடுமலை தேர்நிலையம் ரோடு ரவுண்டானாவில் யானை, மரப்பேட்டை பள்ளி அருகே உள்ள ரவுண்டானாவில் மயில், காந்திசிலை ரவுண்டானாவில் ரேக்ளா போன்றவை அமைக்கப்படுகிறது. பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானாவில் தென்னை மரங்கள், மாட்டு சந்தை ரவுண்டானாவில் மாடு வைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானாவில் தென்னை மரமும், காந்தி சிலை ரவுண்டானாவில் ரேக்ளா வண்டியும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ரவுண்டானா சந்திப்பு பகுதிகளை நகராட்சி நிர்வாகம், தனியார் பங்களிப்புடன் அழகுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
அதில், பஸ் ஸ்டாண்ட், காந்தி சிலை, பல்லடம் ரோடு சந்திப்பு பகுதிகளை அழகுப்படுத்தி, ‘ஐ லவ் பொள்ளாச்சி’ என, வைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
