/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாதுகாப்பில்லாத துணை சுகாதார நிலையம் சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தல்
/
பாதுகாப்பில்லாத துணை சுகாதார நிலையம் சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தல்
பாதுகாப்பில்லாத துணை சுகாதார நிலையம் சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தல்
பாதுகாப்பில்லாத துணை சுகாதார நிலையம் சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தல்
ADDED : செப் 24, 2025 11:25 PM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சொக்கனூரில் உள்ள துணை சுகாதார நிலையத்தில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும், முத்துக்கவுண்டனுாரில் உள்ள சுகாதார நிலைய கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கிணத்துக்கடவு, சொக்கனூரில் 1990ல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், 3 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டது. இந்த சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக அதிகளவில் மக்கள் வருகின்றனர்.
தற்போது, சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாததால் இந்த இடம் ஆக்கிரமிப்பு செய்ய அதிக வாய்ப்புள்ளது. சுகாதார நிலையம் உள்ள பகுதியில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.
இதே போன்று, முத்துக்கவுண்டனூரில் உள்ள அரசு துணை சுகாதார நிலைய கட்டடம், 40 ஆண்டுகளும் மேலாக பயன்பாடின்றி பாழடைந்து காணப்படுகிறது. இந்த கட்டடத்தில் இரவு நேரத்தில் அத்துமீறி நுழைந்து மது அருந்துகின்றனர். இந்தக் கட்டடத்தின் அருகே அரசு பள்ளி இருப்பதால், மாணவர்கள் நலன் கருதி இந்த கட்டடத்தை புதுப்பித்து பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
இது குறித்து, சொக்கனூர் ஊராட்சி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசு கூறியதாவது:
சொக்கனூர் ஊராட்சி, முத்துக்கவுண்டனூரில் உள்ள அரசு துணை சுகாதார நிலையம் அமைக்க 1970ல், 1.5 ஏக்கர் நிலம் குடும்பத்தினரால் வழங்கப்பட்டது. அதன்பின், இங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது.
இந்த கட்டடத்தில் மருத்துவ வசதிகள் உடன், மருத்துவர்கள், செவிலியர்கள் தங்கவும் தனியாக அறை அமைக்கப்பட்டது. அதன் பின், 1982 முதல் இந்த கட்டடம் பயன்பாடின்றி அலங்கோலமாக காட்சியளிக்கிறது. தற்போது முத்துகவுண்டனூர் துணை சுகாதார நிலையம், வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே, மக்கள் நலன் கருதி, மீண்டும் பழைய கட்டிடத்தை சீரமைத்து, துணை சுகாதார நிலையமாக மாற்ற வேண்டும். அல்லது இந்த இடம் மற்றும் கட்டடத்தை அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வழங்க வேண்டும். இதுகுறித்து, கோவையில் நடந்த மாவட்ட மருத்துவ பேரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளேன்.
சொக்கனுார் துணை சுகாதார நிலையத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினார்.