/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராயல் கேர் மருத்துவமனைக்கு கிடைத்த அமெரிக்கா அங்கீகாரம்
/
ராயல் கேர் மருத்துவமனைக்கு கிடைத்த அமெரிக்கா அங்கீகாரம்
ராயல் கேர் மருத்துவமனைக்கு கிடைத்த அமெரிக்கா அங்கீகாரம்
ராயல் கேர் மருத்துவமனைக்கு கிடைத்த அமெரிக்கா அங்கீகாரம்
ADDED : நவ 05, 2024 06:07 AM

கோவை; கோவை ராயல் கேர் மருத்துவமனை நரம்பியல் அறுவை சிகிச்சையில் சிறந்து விளங்கும் மருத்துவ மையமாக, அமெரிக்க சர்ஜிகல் ரிவியூ கார்ப்பரேஷனின் எஸ்.ஆர்.சி., அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
மருத்துவமனை தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் கூறியதாவது:
இந்தியாவில் முதல் மற்றும் உலகின் 7வது மையமாக இந்த அங்கீகாரம் ராயல் கேர் மருத்துவமனைக்கு கிடைத்துள்ளது. அனைத்து நோயாளிகளுக்கும் தரமான சிகிச்சையை வழங்குவதில் அர்ப்பணிப்பு, பராமரிப்பு, பாதுகாப்பில் சிறந்த தர நிலையைப் பின்பற்றுவதில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரங்களை பூர்த்தி செய்துள்ளது. மருத்துவமனைக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் நரம்பியல் அறுவை சிகிச்சை துறையில் மிகச் சிறந்த மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ சேவை வழங்கி வருகிறது என்பதை குறிக்கிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.
ராயல் கேர் மருத்துவமனையின் தலைவரும், நரம்பியல், முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் மாதேஸ்வரன் நரம்பியல் அறுவை சிகிச்சையில் முதுகலை அறுவை சிகிச்சை நிபுணராகவும், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர்கள் ரகுராஜ பிரகாஷ், செந்தில்குமார் ஆகியோர் நரம்பியல் அறுவை சிகிச்சையில் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்களாகவும் அங்கீகாரம் மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளனர்.