/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மண் வள மேம்பாட்டுக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தணும்'
/
'மண் வள மேம்பாட்டுக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தணும்'
'மண் வள மேம்பாட்டுக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தணும்'
'மண் வள மேம்பாட்டுக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தணும்'
ADDED : நவ 19, 2025 03:35 AM

கோவை: இந்திய மண்ணியல் சங்க (ஐ.எஸ்.எஸ்.எஸ்.,) 89வது ஆண்டு மாநாடு, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில் நேற்று துவங்கியது.
இந்திய மண்ணியல் சங்கம், கோவை வேளாண் பல்கலை மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை சார்பில் நடக்கும் மாநாட்டை, தமிழக அரசின் வேளாண் உற்பத்தி ஆணையர் தட்சிணாமூர்த்தி, காணொ லிக் காட்சி வாயிலாக துவக்கி வைத்து, தமிழக அரசின் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டம் குறித்து விளக்கினார்.
மாநாட்டில், இந்திய மண்ணியல் சங்க தலைவர் ஹிமான்ஷு பதக் தலைமை வகித்துப் பேசுகையில், ''மண் வள மேம் பாட்டுக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தணும்,'' என்றார். பல்கலை துணைவேந்தர் (பொ) தமிழ்வேந்தன், மண்ணியலை முன்னேற்றுவதில் இந்திய மண்ணியல் சங்கத்தின் பங்களிப்புகளை விவரித்தார்.
இந்திய மண்ணியல் சங்க செயலாளர் ரஞ்சன் பட்டாச்சார்யா, சிறப்பாக செயல்பட்ட விஞ்ஞானிகளுக்கு விருதுகளை வழங்கினார். விழாவில், 89வது மாநாட்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பு மற்றும் புத்தகங்கள் வெளியிடப்பட்டன.
வேளாண் பல்கலை ஆராய்ச்சி இயக்குநர் ரவீந்திரன், இயற்கை வேளாண்மை இயக்குநர் பாலசுப்ரமணியம், இந்திய மண்ணியல் சங்க கோவை பிரிவு அமைப்பு செயலாளர் செல்வி உட்பட நாடு முழுதும் உள்ள மண்ணியல் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் பங்கேற்றனர்.

