/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அ.தி.மு.க.வுக்கு திரும்பினார் வடவள்ளி சந்திரசேகர்
/
அ.தி.மு.க.வுக்கு திரும்பினார் வடவள்ளி சந்திரசேகர்
அ.தி.மு.க.வுக்கு திரும்பினார் வடவள்ளி சந்திரசேகர்
அ.தி.மு.க.வுக்கு திரும்பினார் வடவள்ளி சந்திரசேகர்
ADDED : டிச 26, 2025 05:09 AM

கோவை: வடவள்ளியை சேர்ந்த சந்திரசேகர், எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளராக இருந்தார். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில், அமைச்சர் வேலுமணியின் வலதுகரமாக அறியப்பட்ட அவர், அதிகாரமிக்கவராக வலம் வந்தார்.
சட்டசபை தேர்தலில் வடக்கு தொகுதியில் போட்டியிட விரும்பினார்; 'சீட்' கிடைக்கவில்லை. மனைவி சர்மிளாவை மேயராக்க விரும்பி, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வைத்தார். 38வது வார்டில் அவர் வென்ற போதிலும், 3 இடங்களை மட்டுமே அ.தி.மு.க. கைப்பற்றியதால், மேயர் பதவி கிடைக்கவில்லை. ஒதுங்கி இருந்த சந்திரசேகர், ஏப்ரல் மாதம் கட்சியில் இருந்து விலகினார்.
இச்சூழலில், மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி, மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ஜுனன், புறநகர் மாவட்ட செயலாளர் அருண்குமார் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து நேற்று மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். இந்த முறை அவருக்கு சீட் உறுதி என ஆதரவாளர்கள் கூறினர்.

