/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'களை' கட்டியது வால்பாறை; சுற்றுலா பயணியர் அதிகரிப்பு
/
'களை' கட்டியது வால்பாறை; சுற்றுலா பயணியர் அதிகரிப்பு
'களை' கட்டியது வால்பாறை; சுற்றுலா பயணியர் அதிகரிப்பு
'களை' கட்டியது வால்பாறை; சுற்றுலா பயணியர் அதிகரிப்பு
ADDED : நவ 01, 2024 10:21 PM

வால்பாறை ; தொடர் விடுமுறையால், வால்பாறையில் சுற்றுலாபயணியர் அதிக அளவில் வருகை புரிந்தனர்.
வால்பாறையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க, நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாபயணியர் வந்து செல்கின்றனர்.
அட்டகட்டி ஆர்க்கிட்டோரியம், டைகர் பால்ஸ், கவர்க்கல் வியூ பாய்ண்ட், நல்லமுடி பூஞ்சோலை, சோலையாறு அணை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாஸ்தலங்களை, அவர்கள் கண்டு ரசிக்கின்றனர்.
வால்பாறையில் மழை பெய்து வரும் நிலையில், குளு குளு சீசன் நிலவி வருகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி பள்ளி, கல்லுாரிகள் தொடர் விடுமுறையால் இங்கு சுற்றுலாபயணியர் அதிக அளவில் வருகை தந்துள்ளனர்.
அவர்கள் படகுசவாரி பயணம் செய்தும், தாவரவியல்பூங்கா, நீர்வீழ்ச்சிகளையும் கண்டு ரசித்தனர். சுற்றுலாபயணியர் வருகையால் வால்பாறை 'களை' கட்டியுள்ளது.