/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாறை மீது வேன் மோதல்; உயிர் தப்பிய 19 பயணியர்
/
பாறை மீது வேன் மோதல்; உயிர் தப்பிய 19 பயணியர்
ADDED : ஏப் 06, 2025 09:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; ஆழியார், கவியருவி அருகே வால்பாறை மலை பாதையில், பாறையில் வேன் மோதி விபத்தில், 19 பேர், அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
நெய்வேலி மேலகுப்பம் பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் 19 பேர், குழுவாக, நேற்று வால்பாறைக்கு சுற்றுலா வந்தனர். அங்குள்ள பகுதிகளை கண்டுரசித்த அவர்கள், நேற்று மாலை புறப்பட்டனர்.
அப்போது, 4:00 மணி அளவில், ஆழியார் அடுத்த கவியருவி பகுதியில் வந்த வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, ரோட்டோரத்தில் இருந்த பாறை மீது மோதி நின்றது. வேனின் முன்பகுதி சேதமானது. அதேநேரம், வேறு எந்த பாதிப்பும் ஏற்படாததால், 19 பேர், எவ்வித காயங்கள் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.