ADDED : பிப் 14, 2024 11:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி, - பொள்ளாச்சி, திப்பம்பட்டி சிவசக்தி அம்மன் கோவிலில், வராகி அம்மனுக்கு வளர்பிறை வசந்த பஞ்சமி வழிபாடு நடந்தது.
பொள்ளாச்சி அடுத்த, திப்பம்பட்டி பூங்கா நகரில், சிவசக்தி உடனமர் மலையாண்டீஸ்வரர் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில், சிம்ம வாகன வராகி அம்மன் சன்னதியில், வளர்பிறை வசந்த பஞ்சமி வழிபாடு நேற்று நடந்தது.
அம்மனுக்கு, பால், தயிர், இளநீர், திருநீறு, சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக வழிபாடு நடந்தது. அதனை தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பக்தர்கள் திரளாக பங்கேற்று அம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு அம்மனின் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.

