ADDED : ஆக 21, 2026 04:50 PM
அ நிறம் | அளவு
கோவை: ஆவணி மாத பவுர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையான நேற்று வரலட்சுமி விரதம் இருந்து சுமங்கலிகள் வழிபட்டனர்.
கணவர் குழந்தைகளுக்கு நிறைந்த ஆயுள், செல்வம் பெறுவதற்கான முக்கிய வழிபாட்டு நிகழ்ச்சி வரலட்சுமி விரதம். வரலட்சுமிக்கு மலர்களால் அர்ச்சனை செய்து, நெய்வேத்தியமாக கொழுக்கட்டை, சுண்டல், வடை மற்றும் பழங்களை படைத்தனர். தீபாராதனை செய்து, மஞ்சள் கயற்றை வலது கையில் கட்டிக் கொண்டனர்.
ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோயில், ஆர்.எஸ்.புரம் காமாட்சி அம்பாள் கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடந்தது. வீடுகளில் கலசம் அமைத்து லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்தனர். சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம், ரவிக்கை, மஞ்சள்,குங்குமம் ஆகியவை வழங்கப்பட்டது.
