/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் வெரிக்கோஸ் வெயின் பரிசோதனை முகாம்
/
கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் வெரிக்கோஸ் வெயின் பரிசோதனை முகாம்
கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் வெரிக்கோஸ் வெயின் பரிசோதனை முகாம்
கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் வெரிக்கோஸ் வெயின் பரிசோதனை முகாம்
ADDED : அக் 30, 2025 11:17 PM
கோ வை - அவிநாசி ரோட்டில் உள்ள, கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில், வெரிக்கோஸ் வெயின் எனப்படும் கால் நரம்பு வீக்கத்துக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம்,  நவம்பர் 1 முதல் 29ம் தேதி வரை நடக்கிறது.
கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது:
அசுத்த ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் பல்வேறு காரணங்களால் சீரானதாக இருப்பதில்லை. இதனால், பலருக்கு கால்களில் ரத்த நாளங்கள் வீக்க மடைகின்றன.
நாளடைவில் இது சுருண்டு, வலி மற்றும் அரிப்பை ஏற்படுத்தும்.
நிற்கும்போதும், நடக்கும்போதும் வலி அதிகமாக இருக்கும். இந்த நோயை சரியான முறையில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் முகாம் நடக்கிறது.
அதிநவீன கருவிகள் வாயிலாக ஸ்கேன் செய்து, ரத்த நாள வீக்கத்துக்கான காரணத்தை கண்டறிய முடியும். முகாம் காலத்தில் ஸ்கேன் செய்ய, கட்டணத்தில் 50 சத வீதம் சலுகை வழங்கப்படுகிறது.
இந்நோய்க்கு ரேடியோ பிரீவென்சி முறையில் எளிதாக ஒரே நாளில் சிகிச்சை பெற்று, வீடு திரும்ப முடியும். கேஎம்சிஹெச்  மருத்துவமனையில் உள்ள வெய்ன் கிளீனிக்கில், காலை 9 மணிக்கு துவங்கும் இம்முகாம், பிற்பகல் 3 மணி வரை நடக்கிறது.
முன்பதிவுக்கு, 87548 -87568 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

