ADDED : செப் 09, 2026 04:41 PM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது.
கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில் காய்கறி சாகுபடி அதிகம் உள்ளது. விளைவிக்கப்படும் காய்கறிகள் தினசரி மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மார்க்கெட்டில் நேற்று தக்காளி (15 கிலோ பெட்டி) – 300, தேங்காய் (ஒன்று) -–- 25, கத்திரிக்காய் கிலோ – 56, முருங்கைக்காய் -–- 45, வெண்டைக்காய் -–- 55, முள்ளங்கி -–- 15, பூசணிக்காய் -–- 10, அரசாணிக்காய் -–- 10, பாகற்காய் -–- 50, புடலை –- 30, சுரைக்காய் -–- 27, பீர்க்கங்காய் -–- 40, வெள்ளரிக்காய் -–- 25, அவரைக்காய் -–- 60, பீட்ரூட் -–- 25, மற்றும் பச்சை மிளகாய் -–- 30 ரூபாய்க்கு விற்பனையானது.
கடந்த வாரத்தை காட்டிலும், நேற்று தக்காளி (15 கிலோ) -–- 100, தேங்காய் (ஒன்று) -–- 5, முள்ளங்கி கிலோ -–- 3, பீர்க்கங்காய் -–- 10, வெள்ளரிக்காய் -–- 5, அவரைக்காய் -–- 5, பீட்ரூட் -–- 13 ரூபாய் விலை குறைந்துள்ளது.
முருங்கைக்காய் கிலோ -–- 15, வெண்டைக்காய் -–- 15, பாகற்காய் -– 10, புடலை -– 8, சுரைக்காய் -– 5 மற்றும் பச்சை மிளகாய் -–- 10 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.
வியாபாரிகள் கூறுகையில், ‘மழை பொழிவு குறைவு மற்றும் நிலத்தடி நீர்மட்டம் சரிவு காரணமாக, பாசனத்துக்கு போதிய தண்ணீர் இல்லை. இதனால், நாளுக்கு நாள் காய்கறிகள் வரத்து கணிசமாக குறைந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக பெருமாபலான காய்கறிகள், 100 முதல் 500 கிலோ வரை குறைவாக வரத்து இருந்தது. வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமானால் காய்கள் வரத்து மேலும் குறைய வாய்ப்புள்ளது,’ என்றனர்.
