/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தினசரி சந்தையில் காய்கறி விலை உயர்வு
/
தினசரி சந்தையில் காய்கறி விலை உயர்வு
ADDED : செப் 07, 2025 09:19 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில் நேற்று, தக்காளி (15 கிலோ பெட்டி) - 200, தேங்காய் (ஒன்று)38, கத்தரி 45, முருங்கை -70, வெண்டை 30, முள்ளங்கி - 20, வெள்ளரி 10, பூசணி 15, அரசாணி 15, பாகற்காய் -40, புடலை 35, சுரைக்காய் 40, பீர்க்கன்- 30, பீட்ரூட் - 10, அவரைக்காய் - 30, பச்சை மிளகாய் 60 முதல் 70 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
சென்ற வாரத்தை காட்டிலும் முள்ளங்கி -3, வெள்ளரி- 10, பூசணி, அரசாணி மற்றும் பீட்ரூட் ஆகிய காய்கள் 5 ரூபாய் விலை குறைந்துள்ளது. கத்தரி- 15, பச்சை மிளகாய் - 10, சுரைக்காய் - 20, பாகற்காய் புடலை மற்றும் பீர்க்கன் 5 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.
மார்க்கெட்டில் சென்ற வாரம் இருந்த காய்கள் வரத்து இந்த வாரமும் இருந்தது. தக்காளி விலை ஏறும் என விவசாயிகள் பலர் எதிர்பார்த்தனர். ஆனால் தக்காளி (15 கிலோ பெட்டி) அதிகபட்ச விலையாக 200 ரூபாய்க்கும், குறைந்த பட்ச விலையாக 100 ரூபாய்க்கும் விற்பனை ஆனதால் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.