ADDED : செப் 10, 2026 04:41 PM
அ நிறம் | அளவு
உடுமலை: வரத்து குறைவால், உடுமலை உழவர் சந்தையில், பந்தல் காய்கறிகள் விலை அதிகரித்து வருகிறது.
உடுமலை உழவர் சந்தைக்கு, சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து காய்கறிகளை விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனர். நடப்பு சீசனில் மழை இல்லாமல் வறட்சி நிலவுவதால், பந்தல் காய்கறிகள் விலை அதிகரித்து வருகிறது.
நேற்று பீர்க்கன் கிலோ, ரூ.50–60; சுரைக்காய், 15–22; புடலங்காய் 30–40; பாகற்காய் 55–65க்கும் விற்பனையானது. வறட்சியால் பந்தல் காய்கறி சாகுபடி பாதித்து வரத்து குறைந்து வருவதாக, விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இதே போல் பச்சை மிளகாய் கிலோ, ரூ.40–45க்கும், சின்னவெங்காயம் 60–84க்கும் விற்பனையானது.
