/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் வழங்கும் விழா
/
விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் வழங்கும் விழா
ADDED : அக் 14, 2025 09:23 PM

சூலுார்; வரும், அக்., 25 முதல், 27 ம் தேதி வரை தமிழகம் முழுவதும் வேல் பூஜை நடத்த, விஸ்வ ஹிந்து பரிஷத் திட்டமிட்டுள்ளது. அதற்காக, பூஜிக்கப்பட்ட வேல்களை தொண்டர்களிடம் வழங்கும் விழா, சூலுார் அடுத்த குமரன் கோட்டம் அறுபடை முருகன் கோவிலில் நடந்தது.
மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். காமாட்சி புரி ஆதீனம் சாக்த ஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் ஆசியுரை வழங்கி, பூஜிக்கப்பட்ட வேல்களை நிர்வாகிகளிடம் வழங்கினார்.
மாநில செயலாளர் லட்சுமண நாராயணன் பேசு கையில், ஆதி காலம் முதலே தமிழகத்தில் வேல் பூஜை நடத்தப்பட்டு வந்தது. இதன் வாயிலாக இந்துக்கள் ஒன்றிணைக்கப்பட்டனர். வரும், அக்., 25 முதல், 27 ம்தேதி வரை தமிழகம் முழுக்க நடக்கும் வேல் பூஜையில், பக்தர்களை பங்கேற்க செய்து, இந்து கலாசார, பண்பாட்டை விளக்க வேண்டும், என்றார்.
தர்ம பிரசார் மாநில அமைப்பாளர் சுந்தரமூர்த்தி, சேவா நிர்வாகிசெந்தில்குமார், மாவட்ட செயலாளர் விஜயகுமார், இணை செயலாளர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.